• Wed. Dec 25th, 2024

24×7 Live News

Apdin News

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் 7 ஆம் திகதி சபையில் முன்வைப்பு!

Byadmin

Dec 25, 2024


உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.
2025 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஜனவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஜனவரி 10 ஆம் திகதி வரை சபை அமர்வுகள் இடம்பெறும்.

இதன்படி ஜனவரி 7 ஆம் திகதி துறைசார் அமைச்சரால் மேற்படி சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளது எனவும், ஏதேனும் சிக்கல் ஏற்படின் 10 ஆம் திகதிக்குள் அது சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஏற்கனவே கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நிராகரித்தது, புதிதாக வேட்புமனுக்களைக் கோரும் வகையிலேயே சட்ட திருத்தம் வரவுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin