• Sun. May 11th, 2025

24×7 Live News

Apdin News

உள்ளூரில் சீண்டப்படாத நுங்கு.. மதிப்பு தெரிந்து வாங்க போட்டிப் போடும் வெளிநாட்டினர்!

Byadmin

May 11, 2025


தமிழ்நாட்டில் அதிகம் காணப்படும் பனை மரங்கள் அண்டை மாநிலங்களிலும் உணவு பயன்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பனைமரத்திலிருந்து பெறப்படும் பனங்கிழங்கு, நுங்கு உள்ளிட்டவை பல்வேறு ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ளன.

வெயில் காலங்களில் சாலையோரங்களில் விற்கப்படும் நுங்கு உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும், நன்மைகளை தரக்கூடியது. ஆனால் குறைந்த விலையில் கிடைக்கும் நுங்கை பலரும் உதாசீனம் செய்வதும், குளிர்பானங்களை வாங்கி குடிப்பதும் அதிகமாக உள்ளது.

ஆனால் வெளிநாடுகளில் நுங்கிற்கு ஏக கிராக்கி உருவாகியுள்ளது. சமீபமாக வெளிநாடுகளிலும் வெப்பம் அதிகமாக உள்ள நிலையில், வெப்பத்தை தணிக்க அந்நாட்டு மக்கள் இந்தியாவிலிருந்து வரும் நுங்கை வாங்கி சாப்பிடுகிறார்களாம். அமெரிக்கா, மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இதனால் இந்தியாவிலிருந்து நுங்கு உற்பத்தி அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறாக நுங்கை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் தெலுங்கானா முன்னிலை வகிக்கும் நிலையில் தமிழ்நாட்டிலும் நுங்கு வணிகம் மேம்பட வேண்டும் என்று இயற்கை தன்னார்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.’

By admin