• Fri. Feb 7th, 2025

24×7 Live News

Apdin News

ஊடகர் லசந்தவின் கொலைக்கு நீதி வேண்டும்

Byadmin

Feb 6, 2025


ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விடுதலை செய்வதற்குச் சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க பரிந்துரை செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊடகவியலாளர்கள் இணைந்து உயர்நீதிமன்ற வாயிலில் இன்று வியாழக்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

2009  ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இனந்தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்தக் கொலை வழக்குடன் தொடர்புடைய மூன்று நபர்களை விடுதலை செய்வதற்குச் சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க பரிந்துரை செய்திருந்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்  ஊடகவியலாளர்கள் இணைந்து பதாகைகளை ஏந்தியவாறு உயர்நீதிமன்ற வாயிலில் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது லசந்த விக்கிரமதுங்க உள்ளிட்ட பல படுகொலைகளுக்கு நீதி வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

By admin