• Mon. Aug 18th, 2025

24×7 Live News

Apdin News

ஊடகவியலாளர் குமணனிடம் சுமார் ஏழு மணித்தியாலம் விசாரணை

Byadmin

Aug 18, 2025


முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் இன்று (17) காலை 9.30 மணிக்கு  அவர்  முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் விசாரணைக்காக சென்றார்.

விசாரணைக்காக அழைக்கப்பட்ட குமணன் சட்டத்தரணி நடராசா காண்டீபனுடன் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் விசாரணைக்காக சென்ற நிலையில் சுமார் பத்து மணியளவில் ஆரம்பித்த விசாரணை சுமார் ஏழு   மணித்தியாலங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது.

By admin