• Thu. May 8th, 2025

24×7 Live News

Apdin News

ஊரை காலி செய்யும் இந்திய எல்லையோர கிராம மக்கள் – நிலவரம் என்ன?

Byadmin

May 7, 2025


அச்சத்தில் கிராமங்களை காலி செய்யும் இந்திய எல்லையோர கிராம மக்கள்

பட மூலாதாரம், Reuters

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்ட தீவிரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தானை தாக்கியது.

அதன் எதிரொலியாக இந்திய எல்லையில் வசிக்கும் மக்கள் கிராமங்களை காலி செய்துக் கொண்டிருக்கின்றனர்.

“இங்கு போர் ஆபத்து உள்ளது, பாகிஸ்தான் நள்ளிரவில் எங்களை தாக்குமா என்று எங்களுக்கு தெரியாது, என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. எங்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்காக, உணவு மற்றும் உடைகளுடன் எங்கள் உறவினர்கள் வீடுகளுக்கு செல்கிறோம்.”

ஃபெரோஸ்பூரின் டெண்டிவாலா கிராமத்தைச் சேர்ந்த பன்ஜோ பாய் என்ற பெண்மணியின் வார்த்தைகள் இவை, பஞ்சாபின் இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களின் மனதில் உள்ள அச்சத்தை அவருடைய வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன.

By admin