0
வாடிக்கையாளர்கள் ஏனைய பிரபல நிறுவனங்களின் பொருள்களை நாடிச்செல்வதால், Nike நிறுவனம் நட்டத்தில் செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஒரு தொகை ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக Nike நிறுவனம் அறிவித்துள்ளது.
Nike நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் Reuters ஊடகத்திடம் அதனைத் தெரிவித்துள்ளார்.
Nike அதன் சில செயல்பாடுகளை, மூன்றாம் தரப்பு நிறுவனங்களிடம் கைமாற்றிவிடவிருக்கிறது. இது தொடர்பான மாற்றங்கள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், எத்தனை ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படவிருக்கின்றனர் என்பதைப் பற்றி குறிப்பிடப்படவில்லை. Nike-யின் தொழில்நுட்பப் பிரிவில் எத்தனை பேர் வேலை செய்கின்றனர் என்ற விவரமும் தெளிவாகத் தெரியவில்லை.
நிறுவனத்தின் நான்காம் காலாண்டு வருவாய், நிபுணர்களின் முன்னுரைப்பைவிடக் கணிசமாகக் குறைந்தது.
வாடிக்கையாளர்களின் கவனத்தை மீண்டும் திருப்ப Nike நிறுவனம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.