• Mon. May 5th, 2025

24×7 Live News

Apdin News

‘எங்களுக்கான நீரை நிறுத்த இந்தியா ஒரு கட்டமைப்பை உருவாக்கினால், அது அழிக்கப்படும்’- பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை

Byadmin

May 4, 2025


இந்தியா, பாகிஸ்தான், தெற்காசியா, ஜம்மு காஷ்மீர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் நீர்வழிப் பாதையை நிறுத்தவோ அல்லது திருப்பிவிடவோ இந்தியா ஏதேனும் கட்டமைப்பை உருவாக்கினால், அது அழிக்கப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இந்தியாவை எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சியான ஜியோ நியூஸின் ‘நயா பாகிஸ்தான்’ நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர், “இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறி, தண்ணீரை நிறுத்தவோ அல்லது திருப்பிவிடவோ ஏதேனும் கட்டமைப்பை உருவாக்கினால், அது பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலாகக் கருதப்படும். அந்தக் கட்டமைப்பை நாங்கள் அழிப்போம்” என்றார்.

“சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது எளிதானது அல்ல, அது பாகிஸ்தானுக்கு எதிரான போர் அறிவிப்பாகும். ஒரு தாக்குதல் என்பது பீரங்கி குண்டுகள் அல்லது துப்பாக்கிகளால் நடத்தப்படுவது மட்டுமல்ல, அதற்கு பல வடிவங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று இது. இதன் காரணமாக, எங்கள் நாட்டு மக்கள் பசி அல்லது தாகத்தால் இறக்க நேரிடும்” என்று அவர் கூறினார்.

கடந்த ஏப்ரல் 22 அன்று, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு, ‘1960ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை’ நிறுத்தி வைப்பது உள்பட, பாகிஸ்தானுக்கு எதிரான பல கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.

By admin