1
ஜன்னலுக்கு வெளியே கத்தியைக் காட்டி நபர் ஒருவர் கத்தியதை அடுத்து அங்கு ஆயுதம் ஏந்திய பொலிஸார் நிறுத்தப்பட்டதை அடுத்து இலண்டன் high street மூடப்பட்டது.
திங்களன்று லூயிஷாம் high street இல் எச்எஸ்பிசிக்கு மேலே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னலுக்கு வெளியே நபர் ஒருவர் கத்தியை அசைப்பது போன்ற படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன.
இதனையடுத்து, அந்த நபருடன் அதிகாரிகள் பேசி வருவதாகவும், குடியிருப்பில் வேறு யாராவது இருக்கிறார்களா என்பதைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
அவசரகால நடவடிக்கையாக ஆயுதம் ஏந்திய பொலிஸார் அங்கு சென்ற நிலையில், குறித்த வீதி பூட்டப்பட்டதாக ஒரு உள்ளூர் கடைத் தொழிலாளி தெரிவித்துள்ளார்.
அதிக கோபம் கொண்ட அந்த நபரின் கையில் கத்தியொன்று இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.