• Thu. Apr 2nd, 2026

24×7 Live News

Apdin News

எடப்பாடி பழனிசாமி: சாதாரண தொண்டனில் இருந்து அதிகார மையம் வரை

Byadmin

Apr 2, 2026


'முதல் தேர்தலே தோல்வி' : அதிமுகவில் அதிகார மையமாக எடப்பாடி பழனிசாமி உருவானது எப்படி?

பட மூலாதாரம், Edappadi Palanisamy

  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

(தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் அதிக கவனம் பெறும் தலைவர்களின் வாழ்க்கைப் பயணத்தை ஒரு தொடராக பிபிசி தமிழ் வெளியிடுகிறது. அந்த வரிசையிலான கட்டுரை இது. )

“மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து தேர்தல் நிலவரம் குறித்துப் பேசினேன். நான்கைந்து மாநிலங்களில் தேர்தலை அறிவித்துவிட்டதால் உள்துறை அமைச்சருக்கு நிறைய வேலைகள் உள்ளன. அதனால் நான் வந்து பார்த்துவிட்டுச் செல்கிறேன்”

2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக டெல்லிக்கு வந்து செல்வது குறித்த தி.மு.கவின் விமர்சனத்துக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கம் இது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க ஆட்சியை வழிநடத்தியது முதல் கட்சியின் உச்சகட்ட அதிகாரத்தைக் கைப்பற்றியது வரை பழனிசாமியின் அரசியல் பயணம், பல எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டது.

சேலம் மாவட்டத்தில் கோனேரிப்பட்டி அ.தி.மு.க கிளைச் செயலாளராக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் அதிகார மையமாக உருவெடுத்தது எப்படி? அவரைப் பற்றிய அரசியல் பயோகிராஃபி இதோ…

By admin