• Fri. Oct 3rd, 2025

24×7 Live News

Apdin News

எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான விபத்து: உயிரிழந்த 9 பேரின் உடல்கள் விமானம் மூலம் அசாமுக்கு அனுப்பி வைப்பு | thermal power station construction collapse bodies of 9 deceased airlifted to Assam

Byadmin

Oct 3, 2025


திரு​வள்​ளூர்: எண்​ணூர் அனல்​மின் நிலைய கட்​டு​மான பணி​யில் சாரம் சரிந்து விழுந்​து, உயி​ரிழந்த 9 தொழிலா​ளர்​களின் உடல்கள் அவர்​களின் சொந்த மாநில​மான அசா​முக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்​கப்​பட்​டது. விபத்து தொடர்​பாக தனி​யார் ஒப்​பந்த நிறுவன உரிமை​யாளர் உட்பட 4 பேர் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், மீஞ்​சூர் அருகே உள்ள வாயலூரில், 1,320 மெகா வாட் மின் உற்​பத்தி செய்​யும் வகை​யில், ரூ. 9,800 கோடி மதிப்​பில் எண்​ணூர் சிறப்பு பொருளா​தார மண்டல மிக உய்ய அனல் மின் திட்ட கட்​டு​மான பணி​கள் கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடை​பெற்று வரு​கிறது. ‘பெல்’ நிறு​வனம் மூலம் நடை​பெற்று வரும் இந்த கட்​டு​மான பணி​யில், பல்​வேறு தனி​யார் ஒப்​பந்த நிறு​வனங்​கள் மூலம் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வடமாநில தொழிலா​ளர்​கள் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

அனல்​மின் நிலை​யத்​துக்கு தேவை​யான நிலக்​கரியை சேமித்து வைக்​கும் கிடங்கு அமைக்​கும் பணி, தற்​போது கர்​நாடகா மாநிலத்​தைச் சேர்ந்த தனி​யார் ஒப்​பந்த நிறு​வனம் மூலம் நடை​பெற்று வரு​கிறது. கடந்த செப்​டம்​பர் 30-ம் தேதி, சேமிப்புகிடங்கின் மேற்​கூரை அமைக்கும் பணி​யில், அசாம் மற்​றும் ஜார்​கண்ட் மாநிலத்​தைச் சேர்ந்த 11 தொழிலா​ளர்​கள் ஈடு​பட்டு கொண்​டிருந்​தனர். அப்​போது, எதிர்​பாரத​வித​மாக இரும்​பாலான மேற்​கூரை சரிந்து விழுந்​தது.

இதில், அசாம் மாநிலத்​தைச் சேர்ந்த சுமன்​கரி​காப், பிர​யான்​டோ, பாபன்​சோரங், முன்னா கெம்​பிரய், சோர்​பூஜீத் தவ்​சேன், தீபக் ராஜீஜுங்க், திம்​ராஜ் தவ்​சேன், பரி​யங்டோ சோரங், பாய்​பிஜித் ஃபாங்​களோ ஆகிய 9 பேர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர்.

ஜார்​கண்ட் மாநிலத்​தைச் சேர்ந்த மங்​கள் கல்​யாண்​டியோ சென்​னை, ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரு​கிறார். உயி​ரிழந்​த 9 தொழிலாளர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்​யப்​பட்​டு அவர்​களின் சொந்த மாநில​மான அசாமுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்​கப்​பட்​டது.

மேலும், விபத்து நடந்த பகு​தி​யில் அமைச்​சர்கள் எஸ்​.எஸ். சிவசங்​கர், சா.​மு.​நாசர் ஆகியோர் ஆய்வு மேற்​கொண்​டனர். அப்​போது, மின்​வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், மேலாண்மை இயக்​குநர் கோவிந்த ராவ், திரு​வள்​ளூர் மாவட்ட ஆட்​சி​யர் பிர​தாப், பொன்னேரி எம்​எல்ஏ துரை சந்​திரசேகர் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

மேலும், விபத்து தொடர்​பாக காட்​டூர் போலீ​ஸார், தனி​யார் ஒப்​பந்த நிறுவன உரிமை​யாளர் ரித்​தீஷ் சர்மா குப்​தா, திட்ட மேலா​ளர் அனுப்​குப்​தா, மேற்​பார்​வை​யாளர் சுமீத், பாது​காப்பு பொறியாளர் மணி​கண்​டன் ஆகிய 4 பேர் மீது 2 பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.



By admin