• Mon. Nov 18th, 2024

24×7 Live News

Apdin News

எந்தெந்த காய்கறிகளை எப்படி கெடாமல் ஃப்ரெஷ்ஷாக வைப்பது…?

Byadmin

Nov 18, 2024


காய்கறிகளில் உள்ள சத்துக்கள் கெடாமல் இருக்க எல்லா காய்கறிகளையும் நாம் ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்த முடியாது. எந்தெந்த காய்கறிகளை எப்படி ஃப்ரெஷ்ஷாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

கேரட்டை வாங்கி ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் கேரட்டை போட்டு வைக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அந்த தண்ணீரை மாற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் கேரட் 10 நாட்கள் வரை கெடாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

பச்சை மிளகாயை காம்புடன் வைத்தால் சீக்கிரமே வாடி விடும். பச்சைமிளகாய் கெடாமல் இருக்க அதனை வாங்கிய உடன் காம்பை நீக்கி வைத்தால் 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இதனை தனியாக ஒரு டப்பாவில் அல்லது பிளாஸ்டிக் கவரில் வைக்க வேண்டும்.

முருங்கைக்காய் வாங்கிய உடனே அதனை துண்டுகளாக நறுக்கி வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

இஞ்சியை வாங்கி, மண் தொட்டியில் மண்ணை நிரப்பி அதனை ஈரமாக்கி அதில் புதைத்து வைத்து தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

By admin