• Sun. Apr 5th, 2026

24×7 Live News

Apdin News

“எந்த தொகுதியையும் கேட்கவில்லை” – சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாதது குறித்து அண்ணாமலை கூறும் விளக்கம்

Byadmin

Apr 4, 2026


பாஜக வேட்பாளர் பட்டியல், அண்ணாமலை, தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026

பட மூலாதாரம், @annamalai_k/X

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அப்பட்டியலில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை.

அதேசமயம், “அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. அவர் ஒரு தொண்டராக தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளவே விரும்புகிறார்” என மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க…

பாஜகவின் வேட்பாளர் பட்டியல்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தாமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் (2021) அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 4 தொகுதிகளை வென்றது.

By admin