• Fri. Apr 25th, 2025

24×7 Live News

Apdin News

“எனக்கு அவர் கடவுள் ” – வடிவேலு

Byadmin

Apr 24, 2025


“ராஜ்கிரண் தான் எனக்குக் கடவுள்” என, நடிகர் வடிவேலு உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர் வடிவேலு நடிப்பில், 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு,பெரிதளவு படங்கள் வெளியாகவில்லை. இடையில் சில படங்களில் அவர் நடித்திருந்தாலும், அவை, பெரிதளவும் பேசப்படவில்லை.

இந்நிலையில் தனது வெற்றிப்படமான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமான வடிவேலு, அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடால், அதில் நடிக்க மறுத்தார். இதனால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு, திரைப்படங்களில் நடிக்க தடை விதித்தது.

இதனயடுத்து, வடிவேலு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். ‘மாமன்னன்’ படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் கூட, நகைச்சுவைப் பாத்திரங்கள் மட்டும் சரியாக அவருக்கு அமையவில்லை.

தற்போது சுந்தர் சி இயக்கத்தில் கேங்கர்ஸ் படத்தில் நடித்து வரும் வடிவேலுவுக்கு, இந்த படம் திருப்புமுனையாக அமையும் என்று நம்பப்படுகின்றது.

இந்நிலையில், வடிவேலு சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தனது தொடக்கக் கால சினிமா வாழ்க்கைப் பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர், “நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் ராஜ்கிரண் சேர் அலுவலகத்தில் தான் தங்கி இருந்தேன். அவர் படங்களிலும் நடித்தேன். அதன் பின்னர் ஆர்.வி.உதயகுமார் சேர் படங்களில் நடித்தேன். தேவர் மகன் படம் வந்து எனக்குத் திருப்புமுனையாக அமைவதற்கு முன்னால் வரை, ராஜ்கிரண் சேர் அலுவலகத்தில்தான் தங்கி இருந்தேன். அவர் அலுவலக முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்களைத் தான், சினிமா நிறுவனங்களுக்குக் கொடுப்பேன். அந்தவகையில், ராஜ்கிரண் சேர்தான் எனக்குக் கடவுள்” என தெரிவித்துள்ளார்.

By admin