• Sun. May 25th, 2025

24×7 Live News

Apdin News

என்கவுன்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜூவின் உடல் விவகாரம் ஏன் நீதிமன்றம் வரை சென்றது?

Byadmin

May 25, 2025


 பஸ்தார் காவல் துறைத் தலைவர் சுந்தர்ராஜ் பி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பஸ்டர் பகுதி காவல்துறை ஐ.ஜி பி. சுந்தர்ராஜ்

சத்தீஸ்கரில் புதன்கிழமையன்று சிபிஐ மாவோயிஸ்ட் பொதுச் செயலாளர் நம்பல்லா கேசவ் ராவ் என்ற பசவராஜூ சத்தீஸ்கர் போலீசாரின் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

இதையடுத்து, அவரது உடலை ஒப்படைக்கும் விவகாரம் குறித்து தற்போது ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.

கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளில் யாருடைய உடல்களும் சனிக்கிழமை காலை வரை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

தெலங்கானாவின் ஹனம்கொண்டாவைச் சேர்ந்த மாவோயிஸ்ட் விவேக்கின் தந்தை, மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் நாராயண்பூர் மாவட்ட மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறைக்கு வெளியே வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை காத்திருந்தார்.

By admin