• Fri. Mar 20th, 2026

24×7 Live News

Apdin News

என்சிஈஆர்டி புத்தகம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு: இனி நீதிமன்றத்தை விமர்சிப்பது கடினமாக இருக்குமா?

Byadmin

Mar 20, 2026


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஈஆர்டி ) எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் குறித்து உச்ச நீதிமன்றம் இரண்டு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நீதித்துறையில் நடைபெறும் ஊழல் குறித்த என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகத்தின் அத்தியாயத்தை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொண்டு இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஈஆர்டி ) எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் குறித்து உச்ச நீதிமன்றம் இரண்டு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

இந்த புத்தகத்தில் (எக்ஸ்ப்ளோரிங் சொசைட்டி : இந்தியா அண்ட் பியாண்ட் ) நீதித்துறை குறித்த ஒரு அத்தியாயம் இடம் பெற்றிருந்தது. அதில் ஒரு பகுதிக்கு “நீதித்துறையில் ஊழல்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

நீதித்துறையின் பல்வேறு நிலைகளில் மக்கள் ஊழலை எதிர்கொள்கின்றனர் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த புத்தகம் குறித்த செய்தி அறிக்கை ஒன்று ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழில் வெளியானது.

அதனைத் தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜோய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி விபுல் எம். பாஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த அத்தியாயம் குறித்த விவகாரத்தை எழுப்பினர்.

By admin