• Tue. Apr 15th, 2025

24×7 Live News

Apdin News

என் இடம் இனி‌ எங்கே? | வியாத்தன்

Byadmin

Apr 13, 2025


பக்குவமாய் சொல்லி வைக்கின்றேன்…
என்னை இதுவரை வளர்த்தெடுத்த என் வீடு
இடிந்து விழ முன்பு,
பெற்றோர் முன் பட்டம் பெற்று நிலை மாற்றி ,
கல்வீட்டில் காலம் வாழ‌ என் கனவு…

கையில் சட்டம் வாங்கி
களை எடுக்கும் காலம் நனவாகும்
அதன் வேர்கள்‌ எம்மில் ஆழ பதிந்து ரணமாக்கும்…

அடைமழையில் கூரை காற்றில் பறந்து உயிரை பதம் பார்க்கும்…
ஊசாலாடும் மின் கம்பம் எம்மை தீக்கிரையாக்கும்.

எங்களின்‌ கணத்த குரல்களும்
ஓர் நேர பரபரப்பு செய்தியாய் மறையும்.
எங்கள் ஆதங்கங்கள் அரசியல்
மேடை ஏறும் , சுயவிளம்பரம் குவியும்.
கும்பிடு போட்டு தலை கூனிய
அணிவகுத்த ஊராரும் அடிப்பட்டு அழைமோதும்.

என் உறவுகளின்‌ உடல் உக்கிய இடத்தில்
உலகை மிஞ்சிய சுவை தரமாக பணம் பார்க்கும் …
என் இட தகுதி தலைகீழாக விழப்பார்க்கும் …

நீயா தூக்கி பிடித்து காப்பாற்ற வந்தாய் உன் வேலையை பாரு ! என்றால்
என் உயரிய கனவோடு நான் படிப்பில் களம் காண
குறிப்பார்க்கும் நேரம் …
கொட்டித் தீர்த்த அடை மழையில் என் வீடு இடிந்து விழுந்தது.
என் இடம் இனி எங்கே !..

வியாத்தன்

By admin