• Fri. Jan 10th, 2025

24×7 Live News

Apdin News

என். சுப்ரமணியன்: வாரத்திற்கு 90 மணிநேரம் பணி செய்யுமாறு கூறிய எல்&டி தலைவர்

Byadmin

Jan 10, 2025


வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று சர்ச்சை பேச்சு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஞாயிற்றுக்கிழமை அன்றும் வேலை செய்ய வேண்டும் என்று எல் அண்ட் டி (L&T) நிறுவனத்தின் தலைவர் என். சுப்ரமணியன் கூறியுள்ளார் (சித்தரிப்புப்படம்)

இந்தியாவின் முக்கிய நாளிதழ்களில் இன்று (ஜன. 10) வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம்.

ஞாயிற்றுக்கிழமை அன்றும் வேலை செய்ய வேண்டும் என்று எல் அண்ட் டி (L&T) நிறுவனத்தின் தலைவர் என். சுப்ரமணியன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் வாரத்திற்கு 90 மணிநேரம் பணியாளர்கள் வேலை பார்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், “ஞாயிற்றுக் கிழமை அன்று உங்களிடம் வேலை வாங்க இயலவில்லை என்பதை நினைத்து நான் வருந்துகிறேன். என்னால் ஞாயிறு அன்று உங்களிடம் வேலை வாங்க இயலும் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

ஏனென்றால் நான் ஞாயிற்றுக்கிழமை அன்று பணியாற்றுகிறேன். எவ்வளவு நேரம் தான் வீட்டில் அமர்ந்திருப்பீர்கள்? எவ்வளவு நேரம் தான் உங்களின் மனைவியின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள்? மனைவிகளும் எவ்வளவு நேரம் கணவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்?” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

By admin