நான் தளர்ந்து
போகையில் எனை
வலுவூட்டியவள்,
என் துன்பங்களில்
எனக்கு துணை
நின்றவள்,
இவள் தான்
என் தாயை
போன்றவள்,
என் முகத்தில்
கவலை இருந்தால்,
தன் கவலை மறந்து
எனை சிரிக்க வைப்பவள்,
எனை நீங்காதவள்
எனை என்றும்
வெறுக்காதவள்,
நட்பிற்கு இலக்கணம்
அவள், அன்பின்
மறுவுருவமும் அவள்.
~~~~
விண்ணவன், குமுழமுனை
The post என் நண்பி | விண்ணவன் appeared first on Vanakkam London.