• Sat. Feb 21st, 2026

24×7 Live News

Apdin News

எப்ஸ்டீன் கோப்புகள்: இந்திய அமைச்சர் ஹர்தீப் பூரி பற்றி இதுவரை தெரியவந்தது என்ன? முழு விவரம்

Byadmin

Feb 21, 2026


எப்ஸ்டீன் கோப்புகள், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, எப்ஸ்டீனின் குற்றச் செயல்களுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகிறார்.

அண்மையில் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகர துவார் எனப்படும் வாயிலுக்கு வெளியே எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக ‘எப்ஸ்டீன் கோப்பில்’ மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் பெயர் இடம் பெற்றுள்ளதால், அவர் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் எப்ஸ்டீன் தொடர்பான ஏராளமான கோப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த எப்ஸ்டீன் கோப்புகளின்படி, 2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஹர்தீப் சிங் பூரிக்கும் ஜெப்ரி எப்ஸ்டீனுக்கும் இடையே மின்னஞ்சல் வழியாக பலமுறை உரையாடல் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள ஹர்தீப் சிங் பூரி, எப்ஸ்டீனின் எந்தவொரு குற்றச் செயல்களுடனும் தனக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, எப்ஸ்டீன் கோப்புகளை ஆய்வு செய்த பிபிசி, அதில் ஆட்சேபனைக்குரியதாகக் கருதப்படும் விஷயங்கள் என்ன என்பது குறித்து அறிய முயற்சி செய்துள்ளது.

By admin