• Sat. Mar 7th, 2026

24×7 Live News

Apdin News

எம்.என். நம்பியார்: சினிமாவில் வில்லனாக நடித்தவர் நிஜத்தில் ஹீரோவாக புகழப்படுவது ஏன்? மகன் பகிரும் சுவாரசிய தகவல்

Byadmin

Mar 7, 2026


'மந்திரி பதவியை மறுத்த நம்பியார்' - மகன் பகிரும் சுவாரசிய தகவல்

பட மூலாதாரம், youtube

‘சினிமாவில் வில்லன், நிஜ வாழ்க்கையில் ஹீரோ’ என்றால் பலருக்கு உடனே நினைவுக்கு வருபவர் எம்.என்.நம்பியார்தான்.

மஞ்சேரி நாராயணன் என்பது அவரின் இயற்பெயர். கேரளாவில் வாழும் நாயர் சமூகத்தின் உட்பிரிவுதான் நம்பியார். பிற்காலத்தில் அவரின் நாராயணன் என்ற பெயர் மறைந்து நம்பியாரே நிலைத்துவிட்டது.

எம்.என்.நம்பியார்

பட மூலாதாரம், Mohan Nambiar

படக்குறிப்பு, எம்.என்.நம்பியார் குடும்ப புகைப்படம்

இன்று நடிகர் எம்.என் நம்பியாரின் 107வது பிறந்தநாள். அவரது மகன் மோகன் நம்பியாரிடம், அவருடைய தந்தையை பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொள்ள முடியுமா என்று பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

”அப்பா நம்பியார் ஊட்டியில் அத்தை வீட்டில் வளரும்போது நவாப் ராஜமாணிக்கம் நாடக கம்பெனியின் செயல்பாடுகள், அவர்கள் காலையில் ஒன்றாக உடற்பயிற்சி செய்வது, நாடக ஒத்திகை, நடிப்பு ஆகியவற்றை பார்த்து வியந்து அதில் சேர்ந்தார்.” என்கிறார்

அவரின் நடிப்பு ஆர்வமும், தீவிர முயற்சியும் அவரை பெரிய நடிகர் ஆக்கியது என்று கூறிய மோகன் நம்பியார், தனது தந்தையின் தனிப்பட்ட பல விஷயங்களை பற்றி விரிவாக கூறினார்.

By admin