• Fri. Aug 22nd, 2025

24×7 Live News

Apdin News

‘எரின்’ சூறாவளி குறித்து இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் எச்சரிக்கை!

Byadmin

Aug 22, 2025


“எரின்” எனப் பெயரிடப்பட்டுள்ள சூறாவளி நெருங்கிவருவதாக, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

வட அட்லாண்டிக் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி நகரும் அந்தப் புயல், அடுத்த வாரத்தின் நடுவில் இங்கிலாந்தைத் தாக்கக்கூடும் என இங்கிலாந்து வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

எரின் சூறாவளி காரணமாக, நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் குறித்த வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்காவில் கிழக்குக் கரையின் பல பகுதிகளில் எரின் சூறாவளிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சூறாவளி நெருங்குவதால் கரையோரம் அலைகளின் வேகம் கூடியிருக்கிறது. வெள்ளமும் சேர்ந்துகொண்டுள்ளது.

இதனால் நார்த் கேரலைனா மாநிலம் அதிகம் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நார்த் கேரலைனா ஆளுநர் ஜோஷ் ஸ்டீன் அவசரகால நெருக்கடிநிலையை அறிவித்துள்ளார்.

மேலும், நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க் போன்ற இடங்களில் நீச்சல் நடவடிக்கைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரையோரம் வசிப்பவர்கள் கவனமாக இருக்கும்படி அமெரிக்கத் தேசிய சூறாவளி நிலையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

By admin