• Thu. Mar 5th, 2026

24×7 Live News

Apdin News

எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

Byadmin

Mar 5, 2026


எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறையை மீண்டும் அமுல்படுத்துமாறு வடக்குமாகாண  அதிபர் சங்கம் ஐனாதிபதிக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக  கடிதம் மூலம்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கடித்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது எமது பகுதிகளில் எரிபொருள் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள், நீண்ட வரிசைகள் மற்றும் ஒழுங்கின்மை ஆகியவை பொதுமக்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

எரிபொருள் பெறுவதற்கு 3 அல்லது 4 மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருக்கும் அவலநிலை தொடர்கிறது.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்ற எரிபொருள் அவசியமாகவுள்ளது. எனவே எரிபொருள் விநியோகத்தைச் சீரமைத்து தேவைக்கேற்ப நியாயமான முறையில் பகிர்ந்தளிக்க QR குறியீட்டு நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அன்புடன் கோருகின்றோம் இக் கோரிக்கையைக் கருணையுடன் பரிசீலித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகின்றோம் என்றுள்ளது.

By admin