• Tue. Oct 1st, 2024

24×7 Live News

Apdin News

எரிபொருள் விலை குறைப்பு! – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை

Byadmin

Oct 1, 2024


மாதாந்த விலைச் சூத்திரத்தின் பிரகாரம் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 21 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 311 ரூபாவாகும்.

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

லங்கா ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 283 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 319 ரூபாவாகும்.

இலங்கை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 183 ரூபாவாகும்.

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதையடுத்து  எரிபொருள் விலை, குறைந்தது 50 ரூபாவுக்கு மேல் குறைக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். எனினும், மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.

By admin