• Thu. Jul 16th, 2026

24×7 Live News

Apdin News

எர்துவான்: ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளுக்குப் பிறகு துருக்கியை எப்படி மாற்றியுள்ளார்?

Byadmin

Jul 16, 2026


மூன்று ஆட்சிக் கவிழ்ப்புகளையும், இரண்டு ராணுவத் தலையீடுகளையும் சந்தித்த நாடான துருக்கிக்கு கூட, 2016 ஜூலை 15 இரவு என்பது முன் எப்போதும் இல்லாத ஒன்றாக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி சில மணிநேரங்கள் மட்டுமே நீடித்தது, ஆனால் அதன் விளைவுகள் கடந்த பத்தாண்டுகளில் துருக்கிய அரசியலை உருமாற்றியுள்ளன.

    • எழுதியவர், பிபிசி நியூஸ் துருக்கி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

தெருக்களில் துப்பாக்கிச் சூடு, நகரும் பீரங்கிகள், அரசு கட்டடங்களுக்கு மேல் தாழ்வாகப் பறக்கும் விமானங்கள், நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல். இவை அனைத்தும் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன.

மூன்று ஆட்சிக் கவிழ்ப்புகளையும், மேலும் இரண்டு ராணுவத் தலையீடுகளையும் சந்தித்த நாடான துருக்கிக்கு, 2016ம் ஆண்டு ஜூலை 15 இரவு என்பது முன்னெப்போதும் இல்லாத ஒன்றாக இருந்தது.

துருக்கி நாடாளுமன்றம் அதற்கு முன்பு ஒருபோதும் தாக்கப்பட்டதில்லை.

அதேபோல, அதிபர் ரெசெப் தயிப் எர்துவான் விடுத்த அழைப்பை ஏற்று, ஆட்சி கவிழ்ப்புக்கு முயன்றவர்களை எதிர்ப்பதற்காக பொதுமக்கள் போராட வந்தபோது, இஸ்தான்புல்லில் உள்ள போஸ்பரஸ் பாலம் (இப்போது அதிகாரப்பூர்வமாக ‘ஜூலை 15 தியாகிகள் பாலம்’ என்று அழைக்கப்படுகிறது) இத்தகைய தாக்குதலைக் கண்டதில்லை.

அடையாளம் தெரியாத ஒரு இடத்திலிருந்து மொபைல் செயலி மூலமாக நேரலையில் உரையாற்றிய எர்துவான், அன்று இரவே தனது ஆதரவாளர்களை வீதியில் இறங்கிப் போராடுமாறு வலியுறுத்தினார்.

By admin