கேகாலை, கித்துல்கல பிரதேசத்தில் எறும்புண்ணியின் இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கடந்த 23 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோ எறும்புண்ணியின் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவருக்கு எதிராக 40 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
The post எறும்புண்ணியின் இறைச்சியுடன் ஒருவர் கைது! appeared first on Vanakkam London.