0
அமெரிக்க பணக்காரர் எலான் மஸ்க்கின் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவுக்கு (Tesla) எதிராக அமெரிக்காவில் ஆங்காங்கே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
“டெஸ்லா காரை புறக்கணிக்க வேண்டும்” மற்றும் “எலான் மஸ்க் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்ற கோஷங்களுடன் போராட்டங்கள் நடக்கின்றன.
அத்துடன், டெஸ்லா காட்சியறைகள், சார்ஜிங் நிலையங்கள் மற்றும் டெஸ்லா வாகனங்கள் மீதான தாக்குதல்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், வெள்ளை மாளிகை வளாகத்தில் டெஸ்லா கார்களில் காட்சிப்படுத்தல் நிகழ்வு நடந்தது.
இதன்போது பல்வேறு வகையான டெஸ்லா மாடல் கார்களை பார்வையிட்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனக்கு பிடித்தமான மாடல் S சிவப்பு நிற காரை வாங்கியுள்ளார்.
எலான் மஸ்க் தள்ளுபடி அளிப்பதாகக் கூறியும் அதை ஏற்காத டிரம்ப், காரின் முழுமையான விலையான 76,880 டாலரை செலுத்தி வாங்கியுள்ளார்.
அதேவேளை, டெஸ்லா நிறுவனம் பங்குச்சந்தையில் சரிவைச் சந்தித்து வருகிறது. இதனையடுத்தே, எலான் மஸ்க்கின் கார்களுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க, டெஸ்லா கார் வாங்குவதாக சமூக ஊடகங்கள் மூலம் டிரம்ப் அறிவித்துள்ளார்.