• Mon. Mar 10th, 2025

24×7 Live News

Apdin News

எலோன் மஸ்க்கின் SpaceX ஏவிய விண்கலம் பத்தே நிமிடங்களில் வெடித்துச் சிதறியது!

Byadmin

Mar 7, 2025


அமெரிக்க பணக்காரர் எலோன் மஸ்க்கின் SpaceX நிறுவனம் ஏவிய விண்கலம் வெறும் பத்தே நிமிடங்களில் வெடித்துச் சிதறியுள்ளது.

சுமார் 125 மீட்டர் உயரம் கொண்ட இந்த விண்கலம் டெக்சஸிலிருந்து நேற்று வியாழக்கிழமை மாலை பாய்ச்சப்பட்டது. எனினும், விண்கலம் பாய்ச்சப்பட்ட 10 நிமிடத்திற்குள் சுக்குநூறாக நொறுங்கியது.

கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பை இழந்த விண்கலம் தாறுமாறாகச் சுற்றி வெடித்துச் சிதறியது. இதனால் அமெரிக்க வான்வெளியை அது பாதித்தது. சில விமான சேவைகளும் தாமதமாகின.

இதனையடுத், SpaceX நிறுவனம் இது குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்பதை மத்திய விமானப்போக்குவரத்து அமைப்பு உறுதிசெய்தது.

அத்துடன், மேற்படி அமைப்புடன் இணைந்து விசாரணை செய்யப்போவதாகவும் திருத்த நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் SpaceX நிறுவனம் தெரிவித்துள்ளது.

SpaceX நிறுவனம் 2 மாதத்திற்கு முன்னர் ஏற்கெனவே விண்கலத்தை அனுப்ப மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

மிகப்பெரிய, சக்திவாய்ந்த விண்கலத்தைச் செவ்வாய்க்கு அனுப்புவது மஸ்க்கின் திட்டமாகும். அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுத்துறை 2030ஆம் ஆண்டுக்குள் ஸ்டார்ஷிப் விண்கலத்தில் நிலாவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

By admin