சென்னை: சென்னை பிராந்தியத்தில் உள்ள எந்த ஓர் இந்தியன் ஆயில் எல்பிஜி பாட்டிலிங் ஆலையிலும் வேலை நிறுத்தம் இல்லை. சிலிண்டர் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐஓசி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பிராந்தியத்தில் உள்ள எந்த ஓர் இந்தியன் ஆயில் எல்பிஜி பாட்டிலிங் ஆலையிலும் வேலை நிறுத்தம் இல்லை. அனைத்து எல்பிஜி பாட்டிலிங் ஆலைகளும் சீராக இயங்குகின்றன. இண்டேன் விநியோகஸ்தர்களுக்கு சிலிண்டர்களை நிரப்புதல் மற்றும் அனுப்புதலில் எந்த ஓர் இடையூறும் இல்லை.
எல்பிஜி சிலிண்டர் விநியோகம் நிலையானதாகவும், தடையின்றியும் இருப்பதை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உறுதியளிக்க இந்தியன் ஆயில் விரும்புகிறது. அனைத்து எல்பிஜி பாட்டில் ஆலைகளிலும் போதுமான எல்பிஜி இருப்பு உள்ளது.
அனைத்து இண்டேன் விநியோகஸ்தர்களுக்கும் வழக்கமான விநியோகம் செய்யப்படுகிறது. வணிக தேவைகளை பூர்த்தி செய்ய விநியோகஸ்தர்கள் போதுமான அளவு எல்பிஜி சிலிண்டர் இருப்பில் வைத்து உள்ளனர்.
இந்தியன் ஆயில் எப்போதும் தேசத்துக்கு முதலிடம் கொடுத்து, ஒவ்வொரு வீடு, வணிக நிறுவனத்துக்கும் எல்பிஜி சிலிண்டர் நம்பகமான, சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதில் எங்கள் செயல்பாடுகள் முழுமையாக உள்ளன.