• Mon. Feb 23rd, 2026

24×7 Live News

Apdin News

எஸ்ஐஆர் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க இனி விண்ணப்பிக்க முடியுமா?

Byadmin

Feb 23, 2026


எஸ்ஐஆர் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்

பட மூலாதாரம், Getty Images

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆர்.) பின்பு, இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் இன்று வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் கடந்த தேர்தலில் இருந்த வாக்காளர்களில் சுமார் 74 லட்சம் அதாவது 12 சதவீதம் பேர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பிருந்த வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் 6,41,14,587 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 5,67,07,380 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 12,21,913 பேர் அதிகமாகவுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிவிட்ட நிலையில், இதற்குப் பின்னும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 74 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம்!

தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. தமிழகத்தில் இந்த பணிகள் கடந்த நவம்பர் 4 ஆம் தேதியன்று துவங்கியது. டிசம்பர் 4 என்று காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில், அதன்பின் இரு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அதன்பின் கணக்கீட்டுப்படிவம் சமர்ப்பிப்பதற்கு டிசம்பர் 14 இறுதிநாளாக அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 19 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

வரைவு வாக்காளர் பட்டியலில் 97.30 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. அதற்குப் பின்பு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் நீக்கவும் முகவரி மாற்றம் செய்யவும் பிப்ரவரி 10 வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. பெயர் சேர்க்க 22.8 லட்சம், நீக்க 2 லட்சம், திருத்தம் செய்ய 9.90 லட்சம் என மொத்தம் 34.7 லட்சம் என்ற எண்ணிக்கையில் படிவங்கள் வழங்கப்பட்டு அவை பரிசீலிக்கப்பட்டன. தேவையான சேர்க்கை மற்றும் மாற்றங்கள் செய்தபின்பு, இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், இந்த பட்டியலை வெளியிட்டு, அதைப் பற்றி விளக்கினார்.

வாக்காளர் எண்ணிக்கை

23.02.2026 அன்றைய நிலவரப்படி தமிழ்நாடு வாக்காளர் எண்ணிக்கை

By admin