• Wed. Dec 17th, 2025

24×7 Live News

Apdin News

எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு: தேர்தல் ஆணையத்துக்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டல் – பாஜக சாடல்

Byadmin

Dec 17, 2025


சென்னை: தேர்தல் கமிஷனின் வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு ஊழியர்களை மறைமுகமாக செயல்பட தமிழக அரசு நிர்வாகம் ஊக்குவிக்கக் கூடாது என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர வாக்காளர் சீர்திருத்தம் "SIR" குறித்தும், போலி வாக்காளர்களை நீக்கி வாக்களிக்க தகுந்தவர்களின் வாக்களிக்கும் உரிமையை நிலைநாட்டும் தேர்தல் கமிஷனின் செயல்பாட்டுக்கும், களங்கம் கற்பிக்கும் வகையில், ஒவ்வொரு நாளும் இது குறித்து கற்பனையான குற்றச்சாட்டுகளை கூறி, அவதூறு பிரச்சாரம் செய்து மக்களை குழப்பம் தமிழக முதல்வர் ஸ்டாலின், பிஹார் தேர்தலின் முடிவுகளுக்கு பிறகாவது இதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.

By admin