• Sat. Nov 8th, 2025

24×7 Live News

Apdin News

எஸ்ஐஆர் பற்றி விவாதம்: ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் | DMK District Secretaries meeting to be held on Nov. 9

Byadmin

Nov 8, 2025


சென்னை: ஸ்டாலின் தலைமையில் நாளை (நவ. 9) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.

மாவட்டச் செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) தொடர்பாக விவாதிக்கப்படும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin