• Sun. Jul 12th, 2026

24×7 Live News

Apdin News

எஸ்.ஜானகி குரலில் ரசிகர்கள் மனதில் நிலைத்த மற்றும் விருது வென்ற 5 பாடல்கள் எவை?

Byadmin

Jul 12, 2026


எஸ்.ஜானகி காலமானார்

பட மூலாதாரம், FB/Janaki

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

‘அன்னக்கிளி’ திரைப்படம் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மட்டுமல்ல, பாடகி எஸ்.ஜானகிக்கும் ஒரு தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுக்கொடுத்தது. அந்தத் திரைப்படத்தில் எஸ்.ஜானகி பாடிய மூன்று பாடல்களும் (மச்சானை பார்த்தீங்களா, அடி ராக்காயி, அன்னக்கிளி உன்ன தேடுது) இன்றும் ரசிகர்களிடையே பிரபலமான பாடல்கள் தான்.

“நான் பல ஆண்டுகளாகப் பாடி வருகிறேன். நான் பாடிய அனைத்து பாடல்களுமே, அந்தந்த மாநில ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. என் தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் மற்ற மொழிகளில் எனது உச்சரிப்பு சரியாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர். ஆனால் இவ்வளவு காலம் தாழ்த்தி, எனக்கு கிடைத்துள்ள கெளரவத்தை ஏற்க எனக்கு மனம் வரவில்லை”

– 2013இல் தனக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்து எஸ்.ஜானகி கூறிய வார்த்தைகள் இவை.

அவர் சிறந்த பாடகிக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநில அரசுகளிடம் இருந்து அவர் 33க்கும் மேற்பட்ட மாநில விருதுகளைப் பெற்றுள்ளார்.

செந்தூரப் பூவே (16 வயதினிலே, 1977)

இளையாராஜா, இசை, தேசிய விருது, எஸ்.ஜானகி, பாடல்கள்

பட மூலாதாரம், Sri Amman Creations

எஸ்.ஜானகி பெற்ற முதல் தேசிய விருது ‘செந்தூரப்பூவே’ பாடலுக்காக தான்.

By admin