• Mon. Oct 14th, 2024

24×7 Live News

Apdin News

எஸ்-70: ரஷ்யா தனது நவீன ட்ரோனை தானே சுட்டு வீழ்த்தியதா? யுக்ரேன் வானில் என்ன நடந்தது?

Byadmin

Oct 14, 2024


ரஷ்யா, யுக்ரேன், ட்ரோன்

பட மூலாதாரம், Russian defence ministry

படக்குறிப்பு, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்தப் பழைய படம், ஓகோட்னிக் டிரோன் Su-57 போர் விமானத்துடன் இணைந்து பறப்பதைக் காட்டுகிறது

கிழக்கு யுக்ரேனில் போர் நடக்கும் இடத்திற்கு மேல் வானில் இரண்டு புகைத் தடங்கள் தோன்றினால் ​​​​அதன் பொருள், ரஷ்ய ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தவுள்ளன என்பதே.

ஆனால், கிழக்கு யுக்ரேனில் இருக்கும் கோஸ்ட்யான்டினிவ்கா நகருக்கு அருகில் நடந்த சம்பவம் இதற்கு முன் நடந்திராதது. ஒரு புகைத்தடத்தின் கீழ்ப்பாதை இரண்டாகப் பிளந்தது. ஒரு புதிய பொருள் மற்ற பாதையை நோக்கி விரைந்தது. அவை ஒன்றையொன்று கடந்த போது ஒரு பிரகாசமான ஆரஞ்சு வெளிச்சம் வானில் ஒளிர்ந்தது.

பலரும் நினைத்தது போல, போர் நடக்கும் இடத்தின் முன்களத்திலிருந்து 20 கி.மீ தொலைவில், ஒரு ரஷ்யப் போர் விமானம் மற்றொரு போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதா? அல்லது ஒரு யுக்ரேனிய ஜெட் விமானம் ரஷ்ய விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதா?

என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில், யுக்ரேனியர்கள் சிதறி கிடந்த பாகங்களை ஆராய்ந்த போது, அவற்றிலிருந்து ரஷ்யாவின் புதிய ஆயுதமான எஸ் -70 ரகசிய ட்ரோன் அழிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

By admin