காணொளி: ஏஐ துறையில் சுணக்கம் ஏற்பட்டால் என்னவாகும்? சுந்தர் பிச்சை எச்சரிக்கை
”ஏஐ தொழில்நுட்பத்தின் ஆற்றலைக் கருத்தில் கொண்டால், அதற்கான உற்சாகம் நியாயமானதே. ஆனால், இணையத்தை இப்போது திரும்பிப் பார்த்தால், அதிகப்படியான முதலீடுகள் செய்யப்பட்டன என்பது தெளிவாகிறது.” என கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
மேலும்” மனிதகுலம் இதுவரை உருவாக்கிக் கொண்டிருக்கும் மிக முக்கிய தொழில்நுட்பம் ஏஐ என்று பல ஆண்டுகளுக்கு முன்பே கூறினேன். இது அசாதாரண நன்மைகளை வழங்கும் திறன் கொண்டது. ஆனால், சமூக இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.” என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு