பட மூலாதாரம், UGC
(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)
ஆந்திராவின் ஸ்ரீககுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக, ஆந்திர பிரதேச முதலைமைச்சர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழந்ததாக, பிபிசியிடம் காவல்துறை கூறியுள்ளது.
ஏகாதசியை முன்னிட்டு ஏராளமானோர் அக்கோவிலில் திரண்டதால் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இத்தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும், மாநில வேளாண் துறை அமைச்சர் கே. அச்சநாயுடுவும் அவ்விடத்திற்கு சென்றார்.
இச்சம்பவம் குறித்து கோவில் நிர்வாகிகளிடம் அவர் கேட்டறிந்தார்.