ஏணி மூலம் மீட்கப்பட்ட பாராசூட் வீரர் – சாகச முயற்சி தோல்வியடைந்தது எப்படி?
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றின் போது, பாராசூட் சாகசத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திட்டத்தின்படி , விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதிக்கும் அந்த நபர் கையில் கால்பந்துடன் மைதானத்தில் தரையிறங்க வேண்டும். ஆனால் காற்றினால் திசை மாறவே, மைதானத்தின் மேற்கூரையில் அந்த வீரர் சிக்கிக் கொண்டார். இதனால் மைதானத்தில் குழுமியிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். எனினும் துரிதமான செயல்பாட்டால், மின்சாரத்தில் இயங்கும் ஏணி மூலம் அந்த பாராசூட் வீரர் பத்திரமாக மீட்கப்பட்டார். இதனால் கால்பந்து போட்டி 45 நிமிடம் தாமதமாகத் தொடங்கியது.