• Wed. Apr 2nd, 2025

24×7 Live News

Apdin News

ஏப்ரல் 22, 23, 24 இல் தபால் மூல வாக்களிப்பு!

Byadmin

Mar 27, 2025


உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

குறித்த திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்கள் ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான தேர்தலும் மே மாதம் 6 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த மூன்று பிரதேச சபை தேர்தலுக்கான வேட்புமனு கையளிப்பு இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

 

By admin