1
ஏமன் தலைநகர் சனாவில் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகளால் இயக்கப்படும் ஏவுகணை சேமிப்பு தளத்தை குறிவைத்து தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
செங்கடல் மீது பல ஹூதி ஆளில்லா விமானங்களையும், கப்பல் எதிர்ப்பு ஏவுகணையையும் தாக்கியதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க இராணுவம் அதன் போர் விமானங்களில் ஒன்று செங்கடலின் மேல் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பின்னர் குறிப்பிட்டுள்ளது.
ஒரு சிறிய காயங்களுடன் இரு குழு உறுப்பினர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
டெல் அவிவ் பூங்காவில் ஹவுதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணையை வீசிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது.