• Tue. Feb 24th, 2026

24×7 Live News

Apdin News

“ஏமாற்ற முயலும் எந்தவொரு நாடும்… “-டிரம்பின் அச்சுறுத்தல் இந்தியாவை இலக்காகக் கொண்டதா?

Byadmin

Feb 24, 2026


 டிரம்ப் -  மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா மீது டிரம்ப் அதிகபட்சமாக 50 சதவீத வரியை விதித்திருந்தார்.

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கடந்த வாரம், அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிபர் டொனால்ட் டிரம்பின் உலகளாவிய வரிகளை ரத்து செய்தபோது, இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் நிம்மதிப் பெருமூச்சு விடும் என்று தோன்றியது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அவமானகரமானது என்று அழைத்த டிரம்ப், நீதிபதிகள் மீது தனி நபர் தாக்குதல்களைத் தொடங்கினார். இப்போது, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையொட்டி வர்த்தக ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யக் கருதும் நாடுகளை அவர் எச்சரித்து வருகிறார்.

திங்களன்று, டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், அந்த நாடுகள் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அச்சுறுத்தியுள்ளார்.

அப்பதிவில், “ஒரு அபத்தமான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் போர்வையில் எங்களை ‘ஏமாற்ற’ முயலும் எந்தவொரு நாடும், குறிப்பாக பல ஆண்டுகளாக அல்லது பல தசாப்தங்களாக அமெரிக்காவை ஏமாற்றிய நாடுகள், இன்னும் அதிக வரிகளை எதிர்கொள்ள நேரிடும். தற்போது ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளை விட அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும்”என்று குறிப்பிட்டுள்ளார்.

பயணத்தை ஒத்திவைத்த இந்திய குழு

பிப்ரவரி 22 அன்று, அமெரிக்க ஊடக நிறுவனமான ப்ளூம்பெர்க் மற்றும் பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின்படி, இந்தியா தனது வர்த்தக பிரதிநிதி குழுவை இந்த வாரம் அமெரிக்காவுக்கு அனுப்பும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளது.

By admin