• Tue. Nov 11th, 2025

24×7 Live News

Apdin News

ஏறாவூரில் வாள்களுடன் பெண் கைது – Vanakkam London

Byadmin

Nov 11, 2025


ஏறாவூரில் பிரதேசத்தில் இரண்டு வாள்களுடன் பெண் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட  புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து  ஏறாவூர் முதலாம் பிரிவிலுள்ள மையவாடி வீதி மீராகேன் பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் 41 வயதுடைய பெண் ஒருவர் ஆவார்.

பெண்ணை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த  பெண்ணின் கணவர் ஏற்கனவே போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

By admin