• Mon. Dec 23rd, 2024

24×7 Live News

Apdin News

ஏழாவது முறை ஆட்சி அமைக்க இலக்கு: திமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன? | Resolutions passed by the DMK Working Committee

Byadmin

Dec 23, 2024


சென்னை: அம்​பேத்கரை அவதூறு செய்​ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக செயற்​குழுக் கூட்​டத்​தில் கண்டனம் தெரிவிக்​கப்​பட்​டது. மேலும், 200-க்​கும் மேற்​பட்ட தொகு​தி​களில் வெற்றி பெற உழைப்​பது, ஒரே நாடு, ஒரே தேர்​தலுக்கு எதிர்ப்பு என்பன உள்ளிட்ட 12 தீர்​மானங்​களும் நிறைவேற்​றப்​பட்டன.

சென்னை தேனாம்​பேட்​டை​யில் உள்ள திமுக தலைமையகத்​தில் கட்​சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்​டா​லின் தலைமையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்​றது. இதில் கட்சி​யின் பொதுச்​செய​லாளர் துரை​முரு​கன், பொருளாளர் டி.ஆர்​.பாலு, முதன்​மை செயலாளர் கே.என்​.நேரு, துணைபொதுச் செயலா​ளர்​கள், செயற்​குழு உறுப்​பினர்​கள், சிறப்பு அழைப்​பாளர்கள் என 800-க்​கும் மேற்​பட்​டோர் பங்கேற்​றனர். திராவிட மாடல் அரசின் நலத்​திட்டங்கள் புத்​தகம் வழங்​கப்​பட்​டது.

சுமார் 3 மணி நேரத்​துக்கு மேலாக நடைபெற்ற கூட்​டத்​தில் 35-க்​கும் மேற்​பட்​டோர் கருத்து தெரி​வித்​தனர். குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகு​தி​யில் திமுக போட்​டியிட வேண்​டும் என நிர்​வாகிகள் விருப்பம் தெரி​வித்​தனர். கூட்​டத்​தில், பொதுச்​செய​லாளர் துரை​முருகன் பேசும்​போது, “கூட்​ட​ணியை கட்டமைப்​ப​தில் திமுக தலைவருக்கு நிகர்யாரு​மில்லை. நாம் களத்​தில் கவனம் செலுத்து​வோம்” என்றார்.

துணை பொதுச்​செய​லாளர் கனிமொழி பேசும்​போது, “தமிழக அரசுக்கு ஆதரவான சூழலால் 50% வாக்​குகள் திமுக கூட்​ட​ணிக்கு கிடைக்​கும். பெண்களை வாக்​குச்​சாவடிக்கு அழைத்​து வரும் பணியை மகளிரணி கவனித்​துக் கொள்​ளும்” என்றார். துணை முதல்வர் உதயநிதி பேசும்​போது, “கூட்டணி நாளுக்கு நாள் வலுவாகிறது. சமூக வலைதளங்​களில் திமுகவை வலுப்​படுத்த வேண்​டும். 200-க்​கும் மேற்​பட்ட தொகு​தி​களில் வெற்றி பெறு​வோம்” என்றார்.

நிறைவாக முதல்வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: சட்டப்​பேர​வைத் தேர்தல் களத்தை எதிர்​கொள்ள ஒன்றரை ஆண்டுகளே உள்ளது. ஏழாவது முறை ஆட்சி அமைக்க வேண்​டும் என்பது​தான் இலக்கு. சட்டப்​பேர​வைத் தேர்​தலில் 200 தொகு​தி​களி​லும் திமுக கூட்டணி வெல்​லும். இந்த நம்பிக்கைக்கு ஆணிவேர் கட்சி​யினர்தான். தமிழகம் என்னும் எல்லை​யோடு அல்லாமல் இந்தியா முழு​வதும் ஜனநாயகத்தை காப்​பாற்ற வேண்​டும் என்ற பொறுப்பை ஏற்று பணியாற்றுகிறோம்.

இதற்​கிடையே, காற்றில் கணக்கு போட்டு கற்பனையில கோட்டை கட்டும் பழனிசாமி, கடந்த நாடாளு​மன்ற தேர்​தலில் அதிமுக​வின் வாக்கு 1 சதவீதம் உயர்ந்​திருக்​கிறது என உளறி இருக்​கிறார். அவர் சொன்ன கணக்கை அறிவுள்ள அதிமுக​காரர்களே கேட்டு சிரிக்​கிறார்​கள். பழனிசாமி டங்ஸ்டன் சுரங்க அனும​திக்கு எதிராக பாஜகவை கண்டித்​தாரா? அம்பேத்கரை கொச்​சைப்​படுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக பேசினாரா? பிரதமரை எதிர்க்​கும் துணிவு அவருக்கு இருக்கிறதா?

திமுக ஆட்சி மீது பெண்​களுக்கு பெரும் நம்பிக்கை இருக்​கிறது. அவற்றை ஆதரவு வாக்​கு​களாக மாற்ற வேண்​டும். திமுக நூற்​றாண்டு காணும்​போதும் ஆட்சிப் பொறுப்​பில் இருக்க வேண்​டும். இவ்வாறு பேசினார்.

முன்னதாக கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானங்​கள்: அம்பேத்கரை அவதூறு செய்த மத்தியஉள்துறை அமைச்​சர், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா, நிதி வழங்குவதில் மத்திய அரசின் பாரபட்ச அணுகு​முறை உள்ளிட்​டவற்றுக்கு கடும் கண்டனம். தமிழக மக்களை வஞ்சிக்​கும் மத்திய அரசு, பேரிடர் நிதி என்பது பாஜக கட்சி நிதி அல்ல என்பதை உணர்ந்து வழங்க வேண்​டும். டங்க்ஸ்டன் சுரங்க விவகாரத்​தில் மத்திய பாஜக அரசுக்​கும், கைகோர்த்து திட்​டத்தை ஆதரித்து தமிழகத்​துக்கு துரோகம் செய்து கபடநாடக​மாடும் அதிமுக​வுக்​கும் கண்டனம். கேரளா​வில் நதிநீர் பிரச்​சினை குறித்து பேசி திரும்பிய முதல்​வருக்கு பாராட்டு. கன்னி​யாகுமரி​யில் வள்ளுவர் சிலை அமைக்​கப்​பட்ட வெள்ளி ​விழாவை ​முன்னெடுக்க வேண்​டும். பேர​வைத் தேர்​தலில் ​திமுக 200 இடங்​களில் – ஏன் 200-க்​கும் மேற்​பட்​ட இடங்​களில்​ வெற்​றி பெறுவதை தொண்​டர்​கள்​ உறுதி செய்​ய வேண்​டும்​ என்​பன உள்ளிட்​ட 12 தீர்​மானங்​கள்​ நிறைவேற்​றப்​பட்​டன.



By admin