• Sun. Jan 12th, 2025

24×7 Live News

Apdin News

ஏவாள்: யூத, கிறித்தவ புனித நூல்களில் கூறப்படும் ஏவாள் யார்? ஆதாமை விட பலவீனமானவரா?

Byadmin

Jan 12, 2025


தடைசெய்யப்பட்ட பழத்தை சாப்பிட்ட "முதல் பாவி" முதல் மீட்பர் வரை: இறையியலாளர்கள் ஏவாளை எவ்வாறு மறுவிளக்கம் செய்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகளவில் பெண் இறையியலாளர்கள் ஏவாளை மறுவரையறை செய்து வருகின்றனர்

உலகின் முதல் பாவியாகவும் கீழ்ப்படியாமையின் உருவகமாகவும் பார்க்கப்படுபவர், ஏவாள். பாம்பினால் தூண்டப்பட்டு, தடை செய்யப்பட்ட பழத்தைச் சாப்பிடத் தேர்வு செய்தவர். அதுமட்டுமின்றி ஆதாமுக்கும் அதையே அவர் வழங்கினார்.

அந்தச் செயலால் அவர்கள் குற்றம் புரிந்தவர்களாகக் கருதப்பட்டனர். பின்னர் அதுவே ஏதேன் தோட்டத்தில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படுவதற்குக் காரணமாக அமைந்தது.

இதுவே, கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளின் தொடக்க நூலிலும் யூதர்களின் புனித நூலான தோராவில் உள்ள பெரேஷித் நூலிலும் உள்ள மையப் புள்ளி.

யூத-கிறிஸ்தவ கலாசாரங்களுக்கான அடிப்படைக் கதையை நாம் கருத்தில் கொண்டு, ஆயிரக்கணக்கான ஆண்டு கால ஆணாதிக்கத்தை அதில் இணைத்தால், ஏவாள் பாவத்தின் உருவகமாகிறார்.

By admin