• Thu. Jan 22nd, 2026

24×7 Live News

Apdin News

ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்த நேர்காணலுக்குப் பின் எழுந்த சர்ச்சை என்ன? முழு பின்னணி

Byadmin

Jan 22, 2026


ஒரு நாள் இந்தியாவின் பெருமை என்றும் மறுநாள் துரோகி என்றும் முத்திரை குத்தப்படும் ஏ.ஆர். ரஹ்மான்

பட மூலாதாரம், Getty Images

ஏ.ஆர். ரஹ்மான் ஒரு நேர்காணலில் தனது மனதைத் திறந்து பேசியதற்காக இப்படிப்பட்ட சிக்கலில் சிக்கிக்கொள்வோம் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

ஒரு காலத்தில் அவர் இந்தியாவின் வைரமாக போற்றப்பட்டார். உலகம் முழுவதும் அவரைப் பற்றி பேசப்பட்டது.

பிலிம்பேர், தேசிய விருதுகள், கோல்டன் குளோப், ஆஸ்கார் என நீங்கள் எந்த விருதைப் பற்றிக் கூறினாலும், அவை எல்லாம் அவரைத் தேடி வந்த காலம் இருந்தது.

இந்தியாவின் அடையாளமாக ஏ.ஆர். ரஹ்மான் திகழ்ந்தார். உலகம் முழுவதும் தனது இசையை ஒலிக்கச் செய்து, மக்களை நடனமாட வைத்தார். பின்னர் ‘தாய் மண்ணே வணக்கம்’ பாடி உலகெங்கும் இந்தியாவின் கொடியை ஏற்றினார்.

அந்த நேர்காணலில், பாலிவுட்டின் அதிகாரப் போக்கு மாறிவிட்டதாகவும், தற்போது தன்னிடம் வரும் பணிகள் குறைந்துவிட்டதாகவும் ரஹ்மான் கூறினார். இதற்குக் காரணம் மதவாதமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

By admin