• Sat. Mar 7th, 2026

24×7 Live News

Apdin News

ஐஆர்ஐஎஸ் டெனா: அமெரிக்கா மூழ்கடித்த இரான் போர் கப்பலின் பாதுகாப்பு இந்தியா கையில் இருந்ததா?

Byadmin

Mar 7, 2026


அமெரிக்க பாதுகாப்புத் துறை வழங்கிய இந்த வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டில், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று இரானிய போர்க்கப்பலான 'ஐஆர்ஐஎஸ் டெனா'வை  மூழ்கடிப்பது காட்டப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், US Department of Defense via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க பாதுகாப்புத் துறை வழங்கிய இந்த வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டில், 2026 மார்ச் 4 அன்று இலங்கை கடற்கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ நடவடிக்கைக்கு ஆதரவாக அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று இரானிய போர்க்கப்பலான ‘ஐஆர்ஐஎஸ் டெனா’வை மூழ்கடிப்பது காட்டப்பட்டுள்ளது.

மார்ச் 4, புதன்கிழமை அன்று அமெரிக்கா ஒரு வீடியோவை வெளியிட்டு, தனது நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் இரான் நாட்டின் போர்க்கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி அதை மூழ்கடித்ததாகத் தெரிவித்தது.

பிபிசி சிங்கள மொழிச் சேவைக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்தத் தாக்குதல் புதன்கிழமை அதிகாலை சுமார் 5 மணியளவில் தெற்கு இலங்கை நகரமான காலி அருகே நடந்தது.

இதுவரை 32 மாலுமிகள் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், 84 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் கூற்றுப்படி, இந்த கப்பலின் பெயர் ‘டெனா’. இதில் சுமார் 130 மாலுமிகள் இருந்தனர். இந்தக் கப்பல் இந்தியக் கடற்படையின் அழைப்பின் பேரில் வந்திருந்தது என்றும், எந்த எச்சரிக்கையும் இன்றி இது மூழ்கடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் செய்தி வெளியான பிறகு, சில கேள்விகள் எழுந்துள்ளன.

By admin