• Thu. Apr 16th, 2026

24×7 Live News

Apdin News

ஐஆர்ஐஎஸ் தேனா: மீட்கப்பட்ட இரான் மாலுமிகளை திருப்பி அனுப்பிய இலங்கை – 15 பேர் மட்டும் செல்லாதது ஏன்?

Byadmin

Apr 16, 2026


 'ஐரிஸ் டெனா' கப்பல்

பட மூலாதாரம், @DeptofWar/ US Department of Defense

அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலின் தாக்குதலுக்குப் பிறகு இலங்கையில் தத்தளித்த 200-க்கும் மேற்பட்ட இரானிய மாலுமிகள், ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சிக்கியிருந்த நிலையில் தற்போது தாயகம் திரும்புகின்றனர்.

புதன்கிழமை அன்று, இலங்கையின் பாதுகாப்பு இணை அமைச்சர் அருண ஜெயசேகர, ‘ஐஆர்ஐஎஸ் தேனா’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளும், ‘ஐஆர்ஐஎன்எஸ் புஷெர்’ கப்பலில் இருந்த 206 மாலுமிகளும் நாட்டை விட்டு செல்வதை உறுதிப்படுத்தினார்.

கடந்த மார்ச் 4-ஆம் தேதி, இலங்கை தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 40 கி.மீ (25 மைல்) தொலைவில், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட நீர்மூழ்கி ஏவுகணை தாக்கியதில் இரானியப் போர்க்கப்பலான ‘ஐஆர்ஐஎஸ் தேனா’ மூழ்கியது.

இந்தத் தாக்குதலில் 104 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

மார்ச் 5-ஆம் தேதி, இரானிய கடற்படைக் கப்பலான ‘புஷெர்’-இன் எஞ்சின்களில் ஒன்று பழுதடைந்ததால், அக்கப்பல் இலங்கைத் துறைமுகங்களில் ஒன்றில் நிறுத்த அனுமதி கோரியது. அதன் பிறகு இலங்கை அக்கப்பலை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது.

By admin