• Sat. Mar 7th, 2026

24×7 Live News

Apdin News

ஐஆர்ஐஎஸ் லாவன்: இரான் போர்க்கப்பல் கொச்சியில் நிற்பது ஏன்? இந்தியா கூறுவது என்ன?

Byadmin

Mar 7, 2026


ஐஆர்ஐஎஸ் டெனா

பட மூலாதாரம், @IN_HQENC

படக்குறிப்பு, ஐஆர்ஐஎஸ் தேனா

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இரானின் ஐஆர்ஐஎஸ் லாவன் (IRIS Lavan) கப்பல், கொச்சியில் நிறுத்தப்பட்டுள்ளது. 2026 சர்வதேச கடற்படை கண்காட்சியில் பங்கேற்க இந்த கப்பல் இரான் வந்திருந்தது.

இலங்கையின் தெற்கில் இரானின் ஐஆர்ஐஎஸ் தேனா கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சில நாட்களுக்கு முன்பே, ஐஆர்ஐஎஸ் லாவன் கப்பலைப் பற்றி இரான் இந்தியாவிடம் உதவி கேட்டது என இந்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

பிப்ரவரி 28 அன்று, அந்த கப்பலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், கொச்சி துறைமுகத்தில் நிறுத்த இந்தியாவிடம் இரான் அனுமதி கேட்டது என்றும், மார்ச் 1 அன்று இந்தியா அந்த கோரிக்கையை அங்கீகரித்தது என்றும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

”அதன்பின் அந்த கப்பல் மார்ச் 4 அன்று கொச்சி வந்தது. அந்த கப்பலில் இருந்த 183 பணியாளர்கள் தற்போது கொச்சியில் உள்ளனர்.”

இரான் கப்பலுக்கு அனுமதி கொடுத்தது மனிதாபிமான ரீதியிலாக எடுக்கப்பட்ட முடிவு என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் தெரிவித்தார்.

By admin