1
‘புஷ்பா 2 ‘ படத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமான இந்திய நடிகராக அறியப்படும் ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார்.
இயக்குநர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் உருவான ‘ ஜுலாயீ’, ‘சன் ஆஃப் சத்யமூர்த்தி’, ‘அலா வைகுந்தபுரமுலு’ என மூன்று சுப்பர் ஹிட் படங்களில் பணிபுரிந்த இந்தக் கூட்டணி மீண்டும் புராண மற்றும் காவிய பின்னணியில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் இணைகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் 2027 ஆம் ஆண்டில் பட மாளிகையில் வெளியிடப்படும் வகையில் திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் , தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தற்போது ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.