• Tue. Oct 28th, 2025

24×7 Live News

Apdin News

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அரை இறுதிகள்: மத்தியஸ்தர்கள் குழாத்தில் இலங்கையின் நிமாலி, மிஷெல்

Byadmin

Oct 28, 2025


இந்தியாவில் இவ் வாரம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டிகளுக்காக இலங்கையின் நிமாலி வெரேராவும் மிச்செல் பெரெய்ராவும் மத்தியஸ்தர்கள் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

போட்டி தீர்ப்பாளர்களில் ஒருவராக மிச்செல் பெரெய்ராவும் மத்திஸ்தர்களில் ஒருவராக நிமாலி பெரேராவும் ஐசிசியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் அக்டோபர் 30ஆம் திகதி நடைபெறவுள்ள இர்ணடாவது அரை இறுதிப் போட்டியில் தீர்ப்பாளராக மிச்செல் பெரெய்ரா செயல்படுவார்.

நான்காவது மத்தியஸ்தராக நிமாலி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அப் போட்டிக்கு கள மத்தியஸ்தர்களாக லோரென் ஆஜென்பாக், சூ ரெட்ஃபேர்ன் ஆகியோரும் 3ஆவது மத்தியஸ்தராக கிம் கொட்டனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்துக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் குவாஹாட்டியில் அக்டோபர் 30ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டிக்கு தீர்ப்பாளராக இந்தியாவின் ஜீ.எஸ். லக்ஷ்மி நியமிக்கப்பட்டுள்ளார்.

கள மத்திஸ்தர்களாக எலோய் ஷெரிடான், ஜெக்குலின் வில்லியம்ஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

3ஆவது மத்தியஸ்தராக விரிந்தா ரதியும், நான்காவது மத்தியஸ்தராக க்ளயார் பொலோசக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

By admin