• Tue. Mar 25th, 2025

24×7 Live News

Apdin News

ஐபிஎல் 2025: ஒரேபோட்டியில் குவிக்கப்பட்ட 528 ரன்கள் ! சன்ரைசர்ஸ் ஆரம்பமே அமர்க்களம்

Byadmin

Mar 24, 2025


ஐபிஎல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2025 , ராஜஸ்தான் ராயல்ஸ் , ஜோஃப்ரா ஆர்ச்சர் , இஷான் கிஷன், டிராவிஸ் ஹெட்

பட மூலாதாரம், SunRisersHyderabad/X Page

படக்குறிப்பு, 45 பந்துகளில் முதல் ஐபிஎல் சதத்தை அடித்தார் இஷான் கிஷன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2025 ஐபிஎல் சீசனையும் கடந்த சீசனைப் போல் அதிரடியாக தொடங்கி, சாதனை வெற்றியுடன் கணக்கைத் தொடங்கியுள்ளது.

ஹைதராபாத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 2வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்தது. 287 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் சேர்த்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோரை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்து வெற்றி பெற்றது. ஏற்கெனவே 287 ரன்கள் எனும் சாதனை ஸ்கோரையும் சன்ரைசர்ஸ் அணிதான் அடித்திருந்தது. இன்றைய போட்டியில் 300 ரன்களை எட்டுவதற்கு 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டநிலையில் சன்ரைசர்ஸ் ஆட்டம் முடிந்தது.



By admin