கிரிக்கெட் உலகில் ‘மினி ரி20 உலகக் கிண்ணம்’ என கருதப்படும் இண்டியன் பிறீமியர் லீக் ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கின்ற நிலையில் பல வீரர்கள் உபாதைகளால் அவதிபடுகின்றனர்.
இந்நிலையில் உபாதைக்குள்ளான இரண்டு வீரர்கள் முழுமையாக விளையாடமாட்டார்கள் எனவும் இன்னும் சிலர் பணிச் சுமை ஆரம்பப் போட்டிகளில் விளையாட்டுவது சந்தேகம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் சகலதுறை வீரர் சாம் கரனின் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளார்.
இந்த வருடம் அவர் தனது புதிய அணியான ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக விளையாடவிருந்தார்.
மும்பையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ரி20 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியிலேயே கடைசியாக கரன் விளையாடி இருந்தார்.
அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் நேதன் ஸும் ஐபிஎல் இல் விளையாடமாட்டார் என அறிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது நேதன் எலிஸ் உபாதைக்குள்ளானார்.
அவரது தொடைப்பகுதியில் ஏற்கனவே இருந்துவந்த உபாதை மேலும் மோசம் அடைந்துள்ளதால் அவர் தொடரிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, அடுத்துவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைக் கவனத்தில் கொண்டு தங்களது முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களின் பணிச் சுமையை குறைப்பது குறித்து கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா கண்காணித்து வருகிறது.
இதன் காரணமாக மிச்செல் ஸ்டாக் (டெல்ஹி கெப்பிட்டல்ஸ்), ஜொஷ் ஹேஸ்ல்வூட் (றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு)ஆகிய இருவரும் பெரும்பாலும் ஆரம்ப ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என கருதப்படுகிறது.
நியூஸிலாந்து வீரர் லொக்கி பேர்கசனும் ஆரம்பப் போட்டிகளில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெறுகிறார்.
The post ஐபிஎல் 2026இலிருந்து கரன், எலிஸ் விலகினர் | ஆரம்பப் போட்டிகளில் ஸ்டாக், ஹேஸ்ல்வூட் பேர்கசன் இல்லை appeared first on Vanakkam London.